Instagram பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் சந்தா வசதி அறிமுகம்! Enthusiasts அடிப்படையில் பணம்!

Instagram பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் சந்தா வசதி அறிமுகம்! Enthusiasts அடிப்படையில் பணம்!


  • இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் செயலியில் Followers வைத்திருப்பதன் அடிப்படையில் பணம் பெறும் வகையிலான சந்தா வசதியை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Instagram சந்தா வசதி: 

  • உலகம் முழுவதும் அதிக பயனர்களை கொண்டுள்ளது தான் மெட்டா (Facebook) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி. இந்த Instagram செயலி ஒரு பொழுதுபோக்கு மென்பொருள் அதாவது, டிக்டாக் போன்ற வகையில் சில வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டது. தற்போது உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் பெருமளவு ஈர்க்கப்பட்ட ஒரு செயலியாக வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்ஸ்டாகிராம்.

  • இந்த இன்ஸ்டாகிராம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொபைல் போன் மூலம் போட்டோ மற்றும் வீடியோக்கள் போஸ்ட் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் ஒரு சிலர் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்ஸ்டாகிராம் விரைவில் சந்தா வசதியை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் தங்களை பின் தொடர்பவர்களிடம் இருந்து பணம் பெற முடியும். 
  • இந்த சந்தா வசதி ட்விட்டரின் ப்ளூவை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இன்ஸ்டாகிராமில் வரவிருக்கும் இந்த புதிய அம்சத்தைப் பற்றிய தகவலை TechCrunch ஏற்கனவே வழங்கியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் ஒரு பாலோவர்களுக்கு Instagram – ன் சந்தா கட்டணம் $0.99 முதல் $4.99 வரை இருக்கும். அதேபோல் இந்தியாவில் ஒரு பயனருக்கு மாதம் ரூ.89 வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button